குமரி மாவட்டம் இனயம், ஹெலன் நகர் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாபியோ கென்னடி (46). இவர் மீன்பிடி தொழிலாளி. இவருக்கு ஜெனோபா (43) என்ற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். ஷாபியோ சமீப காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு, மருத்துவ சிகிட்சையில் இருந்து வந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். சம்பவ தினம் ஜெனோபா தனது தாயின் நினைவு தின நிகழ்ச்சிக்காக தாய் வீடு சென்றிகுந்தார். ஷாபியோ கென்னடி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தாய் வீடு சென்று விட்டு ஜெனோபா வீட்டு கதவை திறக்க முயன்ற போது, கதவு உட் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஷாபியோ கென்னடி தனது அறையில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷாபியோ கென்னடி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதை அடுத்து இது சம்பந்தமாக புதுக்கடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.