மேலநீலிதநல்லூா் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-06-28 01:38 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் தங்கத்துரை தலைமை வகித்தாா். பனவடலிசத்திரம் காவல் ஆய்வாளா் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். போதைப்பொருள்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா், மாணவிககள் மற்றும் காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Similar News