அகஸ்தீஸ்வரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

கன்னியாகுமரி;

Update: 2025-06-28 12:19 GMT
ஈத்தாமொழி சிவா மருத்துவமனை மற்றும் அகஸ்தீஸ்வரம் தங்கவேல் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவம், மகளிர் நலன், கண் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ ஆலோசனை முகாம் இன்று காலை 10-மணி முதல் மதியம் 2 மணி வரை அகஸ்தீஸ்வரம் தபால் நிலையம் முன்பு நடைபெற்றது., முகாமிற்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வர், டி. சி. மகேஷ், அகஸ்தீஸ்வரம் தபால்நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் சிவஞானசெல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் இலவச பொது மருத்துவம்,, மகளிர் நலன், கண் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ ஆலோசனை முகாம், மற்றும் அதிநவீன லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை அறுவைசிகிச்சை மருத்துவர்கள் குழுவினர் வழங்கினர். முகாமில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News