கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு நாகர்கோவிலில் ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு அடைக்காக்குழி வட்டார குழுவிற்கு உட்பட்ட அடைக்காக்குழி குளப்புறம் நடைக்காவு சூழால் ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு பாதயாத்திரை அடைக்காகுழி வட்டாரச் செயலாளர் ரெஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் துவக்கி வைத்தார். நடை பயணம் அடைக்காகுழி ஜங்ஷனிலிருந்து துவங்கி செங்கவிளை முந்திரி ஆலை அருகில் கடுவாக்குழி தளச்சான் விளை பாங்கோடு கொட்டாரத்துவிளை பாத்திமா நகர் மணலி சூழால் வழியாக ஊரம்பில் வந்தடைந்தது. கூட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் ஆர் செல்வசுவாமி பேசினார்... 20 பெண்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்..