குமரி மாவட்டம் மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (48) இவரது மனைவி சுனிதா (43) இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அஜிதா என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக பிரச்சனை எழுந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. விசாரணைக்கு ஆஜராகி விட்டு சுனிதா போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போது, திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஷைஜு (29) என்பவர் வழிமறித்து சரமாரியாக தாக்கினாராம். இவருக்கும் சுனிதாவுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த சுனிதா குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சந்திரன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.