கவிமணி மண்டபம் கலெக்டர் ஆய்வு

தோவாளை;

Update: 2025-06-29 03:56 GMT
குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பிரதான சாலை அருகில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவாக   அறிவுசார்ந்த நூலகத்துடன் கூடிய மண்டபம் அமைக்க ரூ.92 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு, தற்போது மணிமண்டப பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.   மேலும் மணிமண்டபத்தினை அழகுப்படுத்துவம் விதமாக முகப்பில் நுழைவு வாயில் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை நேற்று  மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பார்வையிட்டார்.  ஆய்வில் செயற்பொறியாளர் ஜோசப் ரென்ஸ்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட் உட்பட  பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News