திருவேங்கடம் சந்தையில் இன்று ஆடு நல்ல விற்பனை
சந்தையில் இன்று ஆடு நல்ல விற்பனை;
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு ஆட்டு சந்தை இயங்கி வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதலே பொதுமக்கள் ஆடுகளை வாங்க அலைமோதினர். இதனால் திருவேங்கடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரிவலம், வந்தநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்தனர். 1 ஆடு ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரை விற்பனையானது. இன்று மட்டும் 7 லட்சம் வரை ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.