குமரி போலீசுக்கு பதவி உயர்வு

கோர்ட் உத்தரவு;

Update: 2025-06-29 06:56 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் உண்ணி கிருஷ்ணன். குழித்துறையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த நிலையில் போலீஸ் எஸ்.ஐ. ஆக தேர்வாகி பணியாற்றி வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகள் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், அதன் பின்னர் ராமநாதபுரம் மாவட்ட விஜிலென்ஸ் டி.எஸ்.பி. யாகவும் பணிபுரிந்து தற்போது தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி துணை முதல்வராக இருந்து வருகிறார். இவருக்கு பதவி உயர்வு தாமதமானதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உண்ணி கிருஷ்ணனை எஸ்.பி யாக பதவி உயர்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது. எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற உள்ள உண்ணிகிருஷ்ணனுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News