வாசுதேவநல்லூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாற்றம்
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாற்றம்;
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளராக அரசியல் பணியாற்றி வந்தவர் பூஜை பாண்டியன் இவரது உடல்நிலை காரணமாக கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் கழகம் பணியாற்ற முடியாத காரணத்தினால் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்'. வடமலாபுரம் பகுதியைச் சேர்ந்த டி,எம்,எஸ் அன்புக்கரசு அவர்களை வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்து அறிவிப்பு ஒன்றை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதில் வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதி திமுக கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.