மேலக்கலங்கல் அங்கன்வாடிக்கு இருக்கைகள் வழங்கல்
அங்கன்வாடிக்கு இருக்கைகள் வழங்கல்;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே மேலக்கலங்கல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஏற்பாட்டில் மேலகலங்கல் அங்கன்வாடியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்திடும் வகையில் இருக்கைகள், பாய் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் துணை சேர்மன் செல்வக்கொடி, கோஸ் பாண்டியன், இளைஞர் அணி கார்த்திக், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் அருணாபாண்டியன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.