புகையிலைப் பொருட்கள் விற்ற வாலிபர் கைது

கல்லம்பாளையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற வாலிபரை பல்லடம் காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2025-06-30 00:43 GMT
பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதிக்கு வைத்திருப்பதாக பல்லடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த வீடு ஒன்றில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரூ.4 லட்சம் மதிப்பிலான 531 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (வயது 25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News