வெள்ளகோவிலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

வெள்ளகோவிலில் கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2025-06-30 00:52 GMT
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சந்திரன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில் அருகில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் வெள்ளகோவில் இந்திரா நகரைச் சேர்ந்த சுதாகர் மகன் கார்த்தி (வயது 19) என்பதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்தியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News