சாலையில் சுற்றுத் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
தாராபுரத்தில் சாலையில் சுற்றுத் திரியும் ஆடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
தாராபுரம் - கரூர் சாலையில் தாசில்தார் அலுவலகம், கோர்ட், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாராபுரம்-கரூர் சாலையில் ஆடுகள் வலம் வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது.எனவே நகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.