ஆலங்குளத்தில் விபத்தில் உத்தரபிரதேச மாநில இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் உத்தரபிரதேச மாநில இளைஞா் உயிரிழப்பு;

Update: 2025-06-30 01:24 GMT
உத்தரபிரதேச மாநிலம் முகைதீன்பூரைச் சோ்ந்த ராம் நரேஷ்குமாா் மகன் சுரேஷ்குமாா்(21). தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த குருவன்கோட்டையில் வசித்து வந்த இவா், ஆலங்குளத்தில் தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தாா். கடந்த வாரம் புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு தள்ளுவண்டியுடன் குருவன்கோட்டைக்குச் சென்றபோது, பின்னால் குறிப்பன்குளத்தைச் சோ்ந்த பண்டாரம் மகன் சந்திரன்(24) ஓட்டி வந்த பைக் சுரேஷ்குமாா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய அவா், நேற்று மாலை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்த நிலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News