காங்கேயத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா - ஆசிரியர்கள் கொதித்துப் போய் உள்ளனர் பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் - எச்சரிக்கை 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.  ஐபெட்டோவின் அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை பேருரை ஆற்றினார். அதில் ஆசிரியர்கள் கொதித்துப் போய் உள்ளனர் எனவும் அது பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.;

Update: 2025-06-30 02:19 GMT
காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ரா.சு.கார்த்திகேயன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ஜெ.கணேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். இதில் பணி நிறைவு பெற்ற தமிழக ஆசிரியர் கூட்டணியின்  மாநிலத் துணைத் தலைவர் பா.கனகராஜ் உள்ளிட்ட 12 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும். மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற காங்கேயம், அளப்பச்சாக் கவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.ராஜாமணிக்கு பாராட்டு விழாவும் மற்றும் சங்கத்தின் புதிதாக இணைந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழாவும் நடைபெற்றது. முப்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஐபெட்டோவின் அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை பேருரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 2026 பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் தான் இருக்கின்றது ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என எல்லோருமே வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களை சேகரிப்பதிலே தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் எங்களை பொறுத்தவரையில் வாக்காளர் கணக்கு எடுப்பது செய்வதும் ஆசிரியர்கள் என்ற அரசு ஊழியர்கள், வாக்குச்சாவடி பணிகளை செய்வதும் ஆசிரியர்கள் என்ற அரசு ஊழியர்கள், வாக்கு சீட்டு எண்ணுகின்ற இடத்தில் இருப்பவர்களும் ஆசிரியர்கள் என்ற அரசு ஊழியர்கள், அன்றாட அரசு போடுகின்ற மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றதும் ஆசிரியர் அரசு ஊழியர்களே, ஆனால் எங்களுக்கு கொடுத்த அந்த வாக்குறுதிகளை இன்றைய ஆளுங்க கட்சியை பொறுத்தவரையில் அவர் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகள் ஆகியும் மாண்புமிகு முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்னும் பத்து மாதங்களே உள்ளது.. தேர்தலுக்கு முன்னால் பம்பரமாக சுழன்று வந்தார். பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லை. ஆட்சிக்கு வரவேண்டும் என்கின்ற ஒரு எண்ணத்தில் ஒரு உறுதிமொழி அளித்தார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை, ஓய்வூதியதாரர்கள், தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்தம் 9 லட்சம் ஆசிரியர்கள் தான் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர் 12 லட்சம் பேர் பணியாற்றிய இடம் 3 லட்சம் காலிப் பணியிடங்களாக உள்ளது இதில்  6 1/4 லட்சத்திற்கு மேல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களை கரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. உறுதியாகவே தெரிவித்தார்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து 6.1/4 பேருக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வுதி திட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம் என்பதை நீதிமன்றத்திலே சொல்வது போல் சத்தியம் செய்து சொன்னார் முதலமைச்சர். ஆனால் இன்று வரையில் வாக்குறுதியை கொடுக்காத பாஜக மாநிலம் ஆளுகின்ற மாநிலத்தை தவிர எதிர்க்கட்சி ஆளுகின்ற 6 மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்தி விட்டனர். மேற்கு வங்காளத்தில் தொடர்ச்சியாக பழைய ஓய்வூதிய திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால் 200 தொகுதிகள் வருவேன்னு சொல்றீங்க, அதுக்கு மேலேயே வர்றேன்னு கூட சொல்றீங்க இப்போது பார்த்தால் மாநில முழுவதும் எங்கள் ஆட்சி என்கின்றீர்கள் அது உங்களுடைய அரசியல் அதில் நாங்கள் தலையிடவில்லை. மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் உட்பட 21 லட்சம் பேர் மொத்தம் உள்ளனர். பணியில் இருப்பவர்கள் 9 லட்சம் பேர் பணியில் உள்ளனர். பணிகள் இல்லாதவர்கள் குடும்பத்தினர் என எங்களது வாக்கு 1 1/2 கோடி வாக்காளர்கள் குறைந்த பட்சம் உள்ளனர். நீங்க என்னதான் கூட்டணி கட்சி வச்சுக்கோங்க என்ன வேணாலும் நீங்க பண்ணிட்டு போங்க அரசியலையே தலையிடல, கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? அப்போது நீங்க வாக்குறுதியை நிறைவேற்ற இல்லை என்றால் நீங்க கூட்டணி கட்சியே வச்சுக்குங்க, வாக்குச்சாவடிக்கு போங்க, வாக்காளர் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து, வாக்குச்சாவடியில் இருப்பது, வாக்கு எண்ணிக்கையில் இருப்பது என அனைத்தும் நாங்கள் எங்களுக்கு எதுவும் செய்யாம 200 இடம் வரும் 250 இடம் வரும் எதையோ பண்ணிட்டு போங்க. நான் செல்லுகின்ற எல்லா இடங்களிலும் நீண்ட காலமாக அரசியல் அனுபவம் மட்டுமல்ல 52 ஆண்டுகள் பொதுவாழ்விலே சொன்னது நடந்து வருகிறது. எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியான பழைய ஊதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியங்களை கலையாமல், அண்ணா சொன்னா ஊக்க ஊதிய உயர்நிலை அமல்படுத்தாமல் எந்த ஆட்சியிலும் நடக்காது நடைபெற்றுள்ளது என்றார். முதல்வர் கலைஞர் காலத்தில் கொடுத்த பல பண பயன்களை அவரது மகன் இப்போது பறித்துக் கொண்டுள்ளார்.. இப்போது நடைபெறுவது ஆட்சிக்கு தலைவர் முதலமைச்சர் ஆனால் முழுவதும் ஆட்சி நடத்துவது அதிகாரிகள் தான், அதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. அதை நாங்கள் எச்சரிக்கின்றோம் என்றார்.. இதே இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது சொன்னார் அப்போதைய ஆளுங்கட்சியை பார்த்து கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் நடக்கிறது என்றார். இவர் சொன்னது தான் இப்ப ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு அறிவித்துவிட்டனர் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவித்துவிட்டு அன்றாட நிர்வாக மாறுதல்களை இரவு பகலா போட்டீங்கன்னா இப்படி எந்த ஆட்சியில் நடந்திருக்கின்றது. நிர்வாக மாறுதல் எல்லா ஆட்சியிலும் நடந்திருக்கிறது. ஆனால் மாறுதல் கலந்தாய்வு தேதியை  அறிவிச்சு விட்டதுக்கு பிறகு இரவு பகலா நிர்வாக மாறுதலை போடுகிறீர்கள் என்றால் நீங்க சொன்ன அந்த மூணு வார்த்தையும் உங்களுக்கு தான் இருக்கு. ஒரே ஒரு ஆர்டர் நேர்மையா நீங்க போட்டு இருப்பீங்களா?. எந்த ஆட்சியிலும் நடக்காத கல்வித்துறை அநியாயம் நடக்கிறது என்றார். திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாமே முதலமைச்சர் கண்டு கொள்வதில்லை இந்தப் பள்ளி கல்வித்துறை அமைச்சரைப் பொருத்தவரை விளம்பரத்துறை அமைச்சர் தான். எந்த ஒரு பிரச்சனைக்கும் முழுமையாக தீர்வு காண்பதில்லை. ஆசிரியர் இடமாறுதலில் ஊழல் தான் நடைபெற்று உள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளனர். பொதுத் தேர்தலில் அது பிரதிபலிக்கும் என்றார். பள்ளிகளை தனியார் மையமாக்குவதில் சொல்லாமல் செய்து கொண்டு உள்ளது என குற்றம் சாட்டினார். 100 பேர் படிக்கும் பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களை உள்ளனர் அப்போதும் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என்றார். இவர்களின் நோக்கம் என்னவென்றால் பணி நிறைவு பெற்றால் ஆட்கள் போடுவதில்லை என தெரிவித்தார்.

Similar News