மார்த்தாண்டத்தில் பைக் திருடியவர் கைது

கன்னியாகுமரி;

Update: 2025-06-30 07:50 GMT
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகன் (43). மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் முருகன் டாஸ்மாக் கடை அருகே தனது பைக் நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நவர் பைக்கை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதில் பைக்கை திருடியது குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் (36) என்பது தெரிய வந்தது. போலீசார் பைக்கை பறிமுதல் செய்து ராஜகுமாரை நேற்று கைது செய்தனர்.

Similar News