வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணி நிறைவு விழா.
வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணி நிறைவு விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள ஜெகதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ். 5841 செயலாளராக 35 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த பாரதி ஓய்வு பெற்றதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எம் .எஸ். மாதையன் கலந்து கொண்டு பாரதிபொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.