கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழாவின் திருத்தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை மிக விமர்சையாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அய்யாவுக்கு தேங்காய்,பழம்,பூ ஆகியவை சுருள் வைத்து வணங்கி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை சிறப்பித்தனர். முன்னதாக திருதேரோட்டத்தை எம்எல்ஏ தளவாய்சுந்தரம், மேயர் மகேஷ், பாஜக மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.