கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு

கொல்லங்கோடு;

Update: 2025-06-30 15:03 GMT
இந்தியா கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் கொல்லங்கோடு வட்டார மாநாடு, கண்ணநாகம் இ.எம்.எஸ் சென்ட்ரில் வைத்து நடைபெற்றது. மாநாட்டு கொடியை முதிர்ந்த கட்டுமான தொழிலாளி சி.வேலப்பன் ஆசாரி ஏற்றி வைத்தார். வட்டாரத் தலைவர் ஏ. ராஜன் தலைமை தாங்கினார். எஸ்.ஷிபிலா அஞ்சலி தீர்மானமும் ,டி.ஜாண்விக்டர் வரவேற்புரையாற்றினார். சி ஐ டி யு மாவட்டத் துணைத் தலைவர் பி.விஜய மோகனன் மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டாரச் செயலாளர் பி. கிறிஸ்துதாஸ் வேலைஅறிக்கை சமர்ப்பித்தார் .வரவுசெலவு கணக்கினை வட்டார பொருளர் டி.எஸ் .அஜித்குமார் வாசித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே .பி .பெருமாள் புதிய வட்டாரக் குழுவை அறிமுகம் செய்து வைத்து நிறைவுறையாற்றினார். புதிய தலைவராக எ .ராஜன் ,செயலாளர் பி .கிறிஸ்துதாஸ் ,பொருளாளர் டி .எஸ் அஜித் குமார் , துணைத்தலைவர்களாக ஒய். ஆமோஸ் , கே .ஸ்டீபன், எஸ்.ஷிபிலா, பி .கிறிஸ்துதாஸ், பி .ராதாகிருஷ்ணன் ஆசாரி, துணைச் செயலாளர்களாக டி.ஜாண் விக்டர், எஸ்.வேலப்பன்ஆசாரி, எம். மஞ்சு வட்டாரக்குழு உறுப்பினர்களாக டி .சிவன், எம். பி.பிரான்சிஸ், ஏ.சோபி, வில்சன், எச் .சரோஜினி, யசோதா, தேர்வு செய்யப்பட்டனர். கே,ஸ்டீபன் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார் .

Similar News