தென்காசியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவசப் பயிற்சி
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவசப் பயிற்சி;
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு தென்காசி மாவட்டம் தென்காசி சி.எம்.எஸ். மெக்விக்டர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கடையம் நல்லபெருமாள் அறக்கட்டளை உறுப்பினர் கணேசன், எஸ்பிஐ அலுவலர் தென்காசி முத்துரோகினி, வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். கடையம் வட்டாரக்கல்வி அலுவலர் மாரியப்பன் வரவேற்புரையும், அறிமுக உரையும் வழங்கினார். தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முககுமார் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.