விவேகானந்தா கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி

கன்னியாகுமரி;

Update: 2025-07-01 13:48 GMT
கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் துரை நீலகண்டன் கலந்து கொண்டார். அவரை முதல்வர் பேராசிரியர் டி.சி. மகேஷ் வரவேற்றார். புத்தாக்கத்தின் அவசியம் குறித்தும், அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்தும் பேராசிரியர் மாணவர்களுடன் உரையாடினார். இந்த நிகழ்ச்சி, மாணவர்களுக்கு புதிய எண்ணங்கள் மற்றும் முயற்சிகளுக்கு ஊக்கமளித்ததாக அமைந்தது. நிகழ்ச்சியில் துறைதலைவர்கள் முனைவர் இளங்குமார், முனைவர்ஆர்.தர்ம ரஜினி பேராசிரியர்கள் சுரேஷ்,ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Similar News