ஸ்கூட்டர் மீது சிற்றுந்து மோதி ஓய்வு பெற்ற  பாதுகாப்பு படை ஊழியர் உயிரிழப்பு

விபத்து;

Update: 2025-07-01 16:09 GMT
தஞ்சாவூரில் திங்கள்கிழமை ஸ்கூட்டர் மீது சிற்றுந்து மோதியதில், பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை ஊழியர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியைச் சேர்ந்தவர் அன்பானந்தம் (62). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்கூட்டரில் திங்கள்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தார்.  மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் பகுதியில் சென்ற இவர் மீது பின்னால் வந்த சிற்றுந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால், பலத்த காயமடைந்த அன்பானந்தம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News