நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

கன்னியாகுமரி;

Update: 2025-07-02 12:25 GMT
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வடுகன்பற்றை சேர்ந்தவர் மோரிஸ். இவரது மனைவி விஜயராணி வயது 47. இவர் நேற்று மாலை கொட்டாரம் செல்வதற்காக அகஸ்தீஸ்வரத்தில் இருந்து கொட்டாரம் செல்லும் ரோட்டில் நடந்து செல்லும்போது வடுகன்பற்று லைப்ரரி அருகில் செல்லும் போது அதே ரோட்டில் அவருக்கு பின்னால் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் பின்னால் உட்கார்ந்து வந்தவர் திடீரென விஜய ராணியின் கழுத்தில் சுமார் 7 பவன் மதிப்புள்ள தங்கத் தாலி செயினை பறித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயராணி சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து அவர்கள் அதே பைக்கில் தப்பி விட்டனர். இது குறித்து விஜய ராணி கொடுத்த புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின்பறித்து விட்டு தப்பி சென்ற அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News