சுசீந்திரம் கோவில் நடராஜருக்கு ஜோடச அபிஷேகம்

தாணுமாலய சுவாமி கோவில்;

Update: 2025-07-02 12:32 GMT
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் உட்பிரகாரம் நடராஜமூர்த்தி சன்னிதானம் உள்ளது. இந்த சன்னிதானத்தில் வருடம் தோறும் ஆனி உத்திரத்திற்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று ஆனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால் தயிர் குங்குமம் சந்தனம் திருநீறு எலுமிச்சை சாறு இளநீர் தேன் கரும்புச்சாறு மாதுளைச் சாறு களபம் பன்னீர் உட்பட்ட 16 வகையான பொருட்களால் வாசனைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமானுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.

Similar News