பரமத்தி வேலூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்.
பரமத்தி வேலூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
பரமத்தி வேலூர், ஜூலை 2: பரமத்தி வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய பேரூர் திமுக சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' செயலி பயிற்சி பாசறை வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பரமத்தி வேலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பரமத்தி வேலூர் திமுக செயலாளர் முருகன் தலைமை வகித்தார். திமுக செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் வரவேற்றார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், திமுக நிர்வாகிகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் 40 சதவீதத் திற்கு மேலான வாக்காளர்களை திமுகவில் சேர்க்க வேண்டும். பொதுமக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து அவர்களின் விருப்பப்படி திமுகவில் உறுப்பினர்களாக இணைக்கும் பணியை வரும் 45 நாள்களில் செயல்படுத்த வேண்டும். அதேபோல திமுக அரசினால் பொதுமக்கள் பயனடைந்த திட்டங்கள் குறித்தும், பயனடையாத திட்டங்கள் குறித்தும், அப்பகுதியில் உள்ள குறைகளையும் கேட்டறிந்து குறிப்பேடுகளில் பதிவுசெய்ய வேண்டும். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சண்முகம், வேலூர் பேரூர் அவைத்தலைவர் மதியழகன், மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் கள் செந்தில்குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப்பாளர்கள் பூக்கடை சுந்தர், நவ லடி ராஜா, பேரூர் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஐடி விங் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் க லந்துகொண்டனர்.