பேராவூரணி அருகே மின்கம்பத்தில் படர்ந்து கிடக்கும் செடி, கொடிகள் அப்புறப்படுத்தக் கோரிக்கை 

கோரிக்கை;

Update: 2025-07-02 14:24 GMT
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில், மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஆண்டவன் கோவில், மாந்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில், தென்னங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள, 10 க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து மின் கம்பங்களை மறைத்து உள்ளது. மேலும் மின் கம்பிகளிலும் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது.  இதில் பறவைகள், அணில் அமர்ந்து செல்கின்றன. வரும் ஆடி மாதம் காற்று அதிவேகமாக வீசும் என்பதால் மின்தடை ஏற்படும் சூழல் உள்ளது. ஏதேனும் மின் விபத்துக்கள் ஏற்படும் முன்பு செடி, கொடிகளை அப்புறப்படுத்திட வேண்டுமென சம்பந்தப்பட்ட துறையினரை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News