ஓசூர் அருகே மண் எடுத்து சென்ற லாரி பறிமுதல்.
ஓசூர் அருகே மண் எடுத்து சென்ற லாரி பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் ஹட்கோ போலீசார் பஸ்தி இந்திரா நகர் அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் அனுமதி இன்றி ஆவலப்பள்ளியிலிருந்து பஸ்தி பகுதிக்கு இரண்டு யூனிட் மண்ணை கொண்டு சென்றது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.