கிருஷ்ணகிரி:கேளிக்கை விளையாட்டின் போது பெண்ணுக்கு கால் முறிவு. பொறுப்பாளா் மீது வழக்கு.

கிருஷ்ணகிரி:கேளிக்கை விளையாட்டின் போது பெண்ணுக்கு கால் முறிவு. பொறுப்பாளா் மீது வழக்கு.;

Update: 2025-07-03 08:10 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூா் பகுதியை சோ்ந்தவா் ஆனந்த் மனைவி பிரியா (25) குடும்பத்துடன் கடந்த 30-ம் தேதி அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் மாங்கனி கண்காட்சிக்கு வந்தார். அப்போது அங்கு கேளிக்கை விளையாட்டில் ஈடுபட்ட போது பக்கவாட்டில் உள்ள கம்பியில் கால் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கேளிக்கை விளையாட்டுப் பொறுப்பாளா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Similar News