குமரி மாவட்டம் இடைக்கோடு பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பெனட் பாஸ்கரன் என்பவர் விஜயகுமாரிடம் தொழில் உரிமம் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் பென்னட் பாஸ்கரன், அஸ்வின் மற்றும் சபின் ஆகியோர் உடன் சென்று செயல் அலுவலர் விஜயகுமார் உடனடியாக தொழில் உரிமம் வழங்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து விஜயகுமார் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பேரூராட்சி செயல் அலுவலரை மிரட்டியதாக பென்னட் பாஸ்கரன உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.