போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை

நித்திரவிளை;

Update: 2025-07-03 12:44 GMT
குமரி மாவட்டம்  நித்திரவிளை செல்லும் சாலையில் குடப்பள்ளி என்ற பகுதியில் மிகவும் வளைவான சாலை உள்ளது. அந்த இடத்தில்  சாய்ந்த மரங்கள் காணப்பட்டது. இந்த மரத்தால் அந்தப் பகுதி வழியாக செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள வரும் இடையூறு ஏற்பட்டது. மரத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் மர கிளைகளை மட்டுமே அகற்றிவிட்டு மரத்தை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தும் கடந்த 15 நாட்களாக மரத்தடி அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போக்குவரத்து இடையூறான அந்த மரத்தின் தடிகளை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News