இடைக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-07-03 12:52 GMT
விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  உள்நோயாளிகள் பிரிவில் மேல் தளத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டிட பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் அழகு மீனா பார்வையிட்டார். தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பிரசவம் மேற்கொண்டுள்ள தாய்மார்களின்  எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும்  சேவைகள் குறித்தும், பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும்  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.

Similar News