பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்றிய பொறுப்பாளர் ஆய்வு

குமாரபாளையம் அருகே பழுதடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்க ஒன்றிய பொறுப்பாளர் ஆய்வு;

Update: 2025-07-03 16:06 GMT
குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துக்காடு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்த இடித்து பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் உடனடியாக குடிநீர் மேல்நிலை தொட்டியை சரி செய்து தருமாறு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் .நாச்சிமுத்து குளத்துக்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை அளித்த நிலையில் அப்பகுதியை ஒன்றிய பொறுப்பாளர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்..அப்பொழுது பொது மக்களிடம் உடனடியாக குடிநீர் தொட்டி பழுது பார்த்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார் மேலும் உடன் மாவட்ட அறங்காவலர் நியமனகுழு உறுப்பினர் .S.N.சௌந்தரம் மற்றும் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் M.R.ராஜேந்திரன் ,BLA -2 கழக நிர்வாகி த.முருகன் மற்றும் கிளைக் கழக செயலாளர் அன்பழகன் மற்றும் அவைத்தலைவர் .கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News