ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஜூலை 3) ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தமிழ்நாடு முழுவதும் பதவி உயர்வுடன் கூடிய மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஜூலை 3) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி அந்தோணிசாமி தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.