பர்கூர் அருகே டூவீலர் மீது கார் மோதி வாலிபர் உயிரிழப்பு.
பர்கூர் அருகே டூவீலர் மீது கார் மோதி வாலிபர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த காளிக்கோவில் அருகேயுள்ள ஜவுக்குபள்ளம், இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(21) கூலித்தொழிலாளி. இவரும் தனது உறவினர்களான சந்திரன்(24) ராசபுத்திரன்(19) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்றனர். அப்போது ராசபுத்திரன் ஓட்டியுள்ளார். வரட்டனப்பள்ளி சாலையில் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதியது இதில் 3 பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் லோகேஷ் சம்பவ நிகழ்விடத்திலேயே இடத்திலேயே உயிரிழந்தார். 2 பரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.