அஞ்செட்டி அருகே கள்ளத்தொடர்பு காரணமாக சிறுவன் கொலை.
அஞ்செட்டி அருகே கள்ளத்தொடர்பு காரணமாக சிறுவன் கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியின் இளைய மகன் ரோகித். 13 வயதான ரோகித் சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளனர். மாவனட்டி பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்ற 13 வயது சிறுவன் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, மாவனட்டியை சேர்ந்த மாதேவன் (22), கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் விசாரணையில் மாதேவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இருந்த தொடர்பை சிறுவன் பார்த்துவிட்டதால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.