அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடினார் மாவட்ட ஆட்சிய

அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடினார் மாவட்ட ஆட்சியர்;

Update: 2025-07-04 11:23 GMT
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கற்றல் திறன், அடிப்படை வசதிகள், வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.230.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 40 குடியிருப்பு வீடுகளின் தரம் குறித்தும்,ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிபுரம் ஊராட்சியில் 12 ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காதற்கான காரணங்கள், குடும்ப சூழ்நிலைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உயர்கல்வி பயில வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, டி.கடம்பங்குளம் ஊராட்சியில், சிறு பாசன குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.9.85 இலட்சம் மதிப்பில் தொடுவன்பட்டி கண்மாய் தூர்வாரப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கம்பிக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.9.12 இலட்சம் மதிப்பில், வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நர்சரி பண்ணையில் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கம்பிக்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில், பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருவதையும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன் குளம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுகேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், முடுக்கன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, இடைநிற்றல், கற்றல் திறன், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அறிவுறுத்தினார்.

Similar News