வத்திராயிருப்பு அருகே கூடுதல் கட்டிடம் கட்டிதர கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..*
வத்திராயிருப்பு அருகே கூடுதல் கட்டிடம் கட்டிதர கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..*;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூடுதல் கட்டிடம் கட்டிதர கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கீழக்கோட்டையூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 110 மாணவர்கள் வரை கல்வி பயின்று வருகின்றனர். போதுமான கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் அவலம் இருந்து வருகிறது. இந்நிலையில் பலமுறை அரசு அதிகாரிகளிடம் கூடுதல் கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும் கூடுதல் கட்டிடம் கட்டித் தர மறுப்பதாகவும் கண்டு கொள்வதில்லை எனவும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த நிலையில் கூடுதல் கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கி ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் கட்டிடம் கட்டித் தரப்படாததால் இன்று பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராட்டமானது நடைபெற்றது.பின்னர் சம்பவ இடத்திற்கு சிஇஓ மதன்குமார் , வட்டாட்சியர் ஆண்டாள் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் 2 மாதத்திற்குள் கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.