போச்சம்பள்ளி அருகே மின்கம்பிகள் மீது படர்ந்துள்ள செடிகொடிகள்.
போச்சம்பள்ளி அருகே மின்கம்பிகள் மீது படர்ந்துள்ள செடிகொடிகள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி அடுத்த பழனம்பாடி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி பின்புறத்தில் உள்ள கால்வாய் அருகே மீன் கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் மீது காய்கறி பந்தல் போல் செடி கொடிகள் படர்ந்து உள்ளது. மழையின் போது மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றன. எனவே மின் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள செடிகொடிகள் வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கயாக உள்ளது.