அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிமுக பயிற்சி முகாம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிமுக பயிற்சி முகாம் நடந்தது;

Update: 2025-07-04 13:40 GMT
.குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிமுக பயிற்சி முகாம் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. கல்லூரிச் மாணவர் பேரவையின் சிறப்பான செயல்பாடுகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பல்வேறு நலத்திட்டங்கள், நாட்டு நலப்பணித்திட்டத்தின் புனரமைப்பு பணிகள், செஞ்சுருள்சங்கம், பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வுகள், மாணவர்களின் கலை ஆற்றலை வளர்க்கும் நுண்கலை மன்றம், மாணவர் குறைகளை தீர்வு செய்தல், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குழு மூலம் இயற்கையை பாதுகாத்தல் ஆகியவற்றை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் உதவித் தொகை எளிதாக விண்ணப்பிக்கும் முறை, தகுதி, முக்கியத்துவம் மற்றும் தேவையான ஆவணங்களை இணையத்தில் சரிபார்க்கும் முறைகளை பற்றி கூறப்பட்டது. மேலும் தேசிய கல்வி உதவிதொகை மற்றும் ஏ.பி.சி ஐ.டி. இன் பயன்கள் , உயர்கல்வியில் மாணவர்கள் பெற்ற வரவுகளை டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்க உதவுவது குறித்தும் கூறினார்கள். மாணவர்களின் ஓழுக்கம், சமுகம் முன்னேற்றத்தின் மாணவர்களின் பங்கு, இலக்கை அடைதல், ஞானத்தோடு கூடிய பகுத்தறிவு, உயர்ந்த எண்ணம், தொலைநோக்கு பார்வை, அன்பு கலந்த கல்வி ஆகியவற்றைப் பற்றி கூறப்பட்டது. உடல் நலம், சுகாதாரம், மனநலம் பேணுதல், நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் ஆரோக்கியாமான சூழலை உருவாக்குவது பற்றி பேசினார்கள். மாதவிடாய் காலங்களில் பெண்களின் சுகாதாரம் மற்றும் அது தொடர்பாக பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான நடைமுறைகளை பற்றி மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். இதில் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் அருணாச்சலம், பேராசிரியர் சிவக்குமார், பேராசிரியை தமிழ்ச்செல்வி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் அமுதவள்ளி, கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News