மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு விவசாயிகள்  மகிழ்ச்சி  

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update: 2025-07-04 13:42 GMT
மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆண்டுதோறும் ஜூலை  மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நெல் நடவு பாசனத்திற்காக மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடக அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேர்தரு குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வந்ததையடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Similar News