மத்திய சிறை மீது பறந்த டிரோன்!
மத்திய சிறை வளாகத்தின் மீது மத்திய சிறையை படம் பிடிப்பது போன்று டிரோன் ஒன்று பறந்துள்ளது;
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை வளாகத்தின் மீது மத்திய சிறையை படம் பிடிப்பது போன்று டிரோன் ஒன்று பறந்துள்ளது. இதனை பிடிக்க சிறை அதிகாரிகள் முயன்ற போது டிரோன் பறந்து சென்றுள்ளது. இதுகுறித்து மத்திய சிறை துறை அதிகாரிகள் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.