வேப்பனப்பள்ளி அருகே டூவீலர் கவிழ்ந்து பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழப்பு.
வேப்பனப்பள்ளி அருகே டூவீலர் கவிழ்ந்து பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள தம்மண்டரப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (28) பொக்லைன் ஆபரேட்டர். இவர் டூவீலரில் கொத்தகிருஷ்ணப்பள்ளி அருகே சென்ற போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் சீனிவாசன் உயிரிழந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.