கஞ்சா வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2025-07-05 15:42 GMT
அரியலூர், ஜூலை 5- அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே கஞ்சா வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.திருச்சி, ராம்ஜிநகரைச் சேர்ந்த இடும்பன் மகன் பாரதிராஜன்(43) என்பவரை கடந்த 1.6.2025 அன்று கீழப்பழுவூர்  பேருந்து  நிலையத்தில் கஞ்சா விற்ற குற்றத்துக்காக அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து,  திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை உத்தரவிட்டதையடுத்து, பாரதிராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதற்கான நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.

Similar News