ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
பாதிக்கப்பட்ட சத்தியபிரியா எஸ்பி ஆதர்ஷ் பசேராவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் விமல்ராஜை கைது செய்து அவரிடம் விசாரணை;
ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது பெரம்பலூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அதே பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் விமல்ராஜ் (41). இவர் அருமடல் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமம், பிள்ளையார் கேயில் தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு மனைவி சத்தியபிரியா (28). என்பவர் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் விமல்ராஜ், கடந்த சில நாட்களாக சத்தியபிரியாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சத்தியபிரியா எஸ்பி ஆதர்ஷ் பசேராவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் விமல்ராஜை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.