சிவகிரியில் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்

வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்;

Update: 2025-07-06 08:02 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள சிவகிரியில் கால்நடை மருத்துவமனையும், சிவகிரி பேரூராட்சியும் இணைந்து வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், கால்நடை மருத்துவர் சிவகுருநாதன், மருத்துவ அலுவலர் லட்சுமி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது வளர்ப்பு நாய்களே கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தும் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News