பரமத்தியில் மகளிர் விடியல் பேருந்துக்கு உற்சாக வரவேற்பு.
பரமத்தியில் மகளிர் விடியல் பேருந்துக்கு உற்சாக வரவேற்பு.;
பரமத்திவேலூர், ஜூலை.6: பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செங்கோடு வரை செல்லும் மகளிர் விடியல் பேருந்து பரமத்தி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பரமத்தி வேலூரில் இருந்து திருச்செங்கோடு வரை செல்லும் 7சி என்னும் புதிய பேருந்து மற்றும் 9ஏ என்ற வழித்தட நீடிப்பு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்க தொடக்கவிழாபரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரமத்தி பஸ் ஸ்டாப்புக்கு வந்த புதிய பேருந்தை பரமத்தி பேரூர்திமுக சார்பில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் ரமேஷ்பாபு, பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பேரூர் இளைஞரணி விக்னேஸ்வரன், கோபி, ரமேஷ் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பழக்கடை காமராஜ், கவுன்சிலர்கள், நாச்சிமுத்து, ராஜேந்திரன்,முன்னாள் கவுன்சிலர் முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டு பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி பயணம் சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஒன்றிய, பேரூர், கழகநிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், இளைஞரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.