இருசக்கர வாகன விபத்து பெண் உயிரிழப்பு
மொரப்பூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழப்பு காவலர்கள் விசாரணை;
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் சாலையில் இன்று ஜூலை 06 முக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த முல்லைவேந்தன் தனது மனைவி சசிகலா மற்றும் இரு குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து சசிகலா கீழே விழுந்ததில், பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அவரது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.