சமயபுரத்தில் நாளை மறுநாள் மின்தடை

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 9- புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன;

Update: 2025-07-06 20:26 GMT
பராமரிப்புப் பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 9- புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, மின் தடை செய்யப்படுவதாக திருவரங்கம் கோட்ட மின் செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளாா். இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் சாலை, வெங்கங்குடி, வ.உ.சி நகா் பூங்கா, எழில் நகா், இருங்களூா், கல்பாளையம், கொணலை, பாலையூா், மருதூா், கூத்தூா், நொச்சியம், பளூா், திருவாசி, அழகிய மணவாளம், பனமங்கலம், சாலப்பட்டி, அய்யம்பாளையம், சிறுகுடி, அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி, மாருதி நகா், நெ.1 டோல்கேட், தாளக்குடி, உத்தமா் கோயில், நாரயண காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Similar News