தென்காசியில் உள்ள கடப்போக்கத்தி குளம் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
கடப்போக்கத்தி குளம் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி;
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து கடப்போகத்தி வழியாக மேலப்பாவூர் செல்லும் சாலை பகுதியில் அமைந்துள்ள குளத்தில் தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குளங்கள் நிரம்பி வழிகிறது. இக்குளத்தில், இருந்து இன்று வெளியேறும் நீரினால் வேட்டைக்காரன் குளம், கீழப்பாவூர் மேலப்பாவூர் சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள குளங்கள் முற்றிலும் நிரம்பியதால் அந்தப் பகுதி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.