அடிதடி தகராறு, இரு தரப்பினர் மீது வழக்கு ப்பதிவு

குமாரபாளையத்தில் அடிதடி தகராறு சம்பந்தமாக இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2025-07-07 12:57 GMT
குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்,57, சுந்தர்ராஜன், 52. இரு தரப்பினருக்கும் நிலத்ததகராறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 06:00 மணியளவில் வேமன்காட்டுவலசு அர்த்தனாரி என்பவர் வீட்டில் சமாதான பேச்சுவார்த்தை நடந்த போது, இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் படி, இரு தரப்பினர் மீதும் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News